சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு: சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Report Print Rusath in சமூகம்

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பிலிருந்து, கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த காரொன்று அந்த வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது நேருக்கு நேர் மேதியதால் விபத்து நேர்ந்திருந்தது.

இதன்போது, கார் மோதிய வேகத்தினால் பெண் சிறுதூரம் தூக்கியெறியப்பட்டதாகவும், இதனால் பெண்ணுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரது மூளை மற்றும் முள்ளந்தண்டு என்பன பாதிப்புக்குள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் சம்பவத்தில் உயிரிழந்தவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 28 வயதுடைய புவிராசா நிலாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, பெண்ணுடன் மோதிய கார் வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டடிருந்த இரு முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுடனும் மோதி புடைவைக்கடை ஒன்றின் முன்பகுதியினுள் புகுந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்தமையானது அப்பகுதியை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.