மர்மமான முறையில் உயிரிழந்த காட்டுயானை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சூரியபுர பகுதியில் காட்டு யானை ஒன்று மர்மமான முறையில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் திருகோணமலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

யானையின் இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், மின்சாரம் தாக்கியதில் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஜயந்திர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.