தகாத உறவினால் நேர்ந்த விபரீதம்

Report Print Steephen Steephen in சமூகம்

மொறட்டுவ - எகொட உயன பிரதேசத்தில் நேற்றிரவு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் திக்கும்புர, இந்துரன்னவில பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பெண் ஒருவருடன் இருந்து வந்த தகாத உறவே இந்த கொலைக்கு காரணம் என்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கொலை செய்த சந்தேகநபரை கைது செய்ய எகொட உயன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.