ஆயுர்வேதம் என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதி - ஆறு பெண்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கண்டியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு அதன் முகாமையாளரான பெண் உட்பட ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி மோசடி தடுப்பு பிரிவின் பொலிஸாரால் நேற்றைய தினம் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டி ஹேவாஹெட்ட கல்தென்ன வீதியின் சந்தன குமார மாவத்தையில் இந்த பாலியல் தொழில் விடுதி இயங்கி வந்துள்ளது.

ஒற்றர் ஒருவரை அனுப்பி பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமைய நீதிமன்றத்தின் தேடுதல் அனுமதியோடு, விடுதியை சோதனையிட்ட பொலிஸார் இந்த பெண்களை கைதுசெய்துள்ளனர்.

விடுதிக்குள் நுழையும் போது ஆயிரத்து 500 கட்டணத்தை வசூலிப்பதாகவும் உள்ளே சென்ற பின்னர் வேறு தனியான கட்டணங்களை வசூலிப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை நடத்தும்போது அங்கு மருத்துவர் இருக்க வேண்டும் எனவும் சுற்றிவளைப்பை மேற்கொள்ளும்போது மருத்துவர் இருக்கவில்லை எனவும் கண்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.