கடலில் மூழ்கி இரு வெளிநாட்டவர் பலி

Report Print Steephen Steephen in சமூகம்

காலி, ஹபராதுவ கொக்கல மற்றும் தல்பொத்த கடல் பகுதியில் இன்று மதியம் குளித்துக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கொக்கல கடலில் குளித்துக்கொண்டிருந்த 67 வயதான நெதர்லாந்து நாட்டு பெண்ணொருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். உயிர்காப்பு படையினர் பெண்ணை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, தல்பொத்த கடலில் குளித்துக்கொண்டிருந்த 53 வயதான போலாந்து நாட்டவர் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் இணைந்து அவரை காப்பாற்றிய போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த வெளிநாட்டவர்களின் மரண பரிசோதனைகள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன.