ஹட்டனில் மார்கழி மகா இசை உற்சவம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

கல்வி அமைச்சின் அழகியல் பிரிவுடன் இணைந்து ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி இசை மாணவர் ஒன்றியம் வழங்கும் மார்கழி மகா இசை உற்சவமும், தியாகராஜர் ஆராதனையும் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, ஹட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் இன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில், கண்டி காரியாலயத்தின் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங், மத்திய மாகாண உதவிக் கல்விப்பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் தவநாதன் றொபேட் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வு, நாளையும், நாளை மறுதினமும் தொடர்ந்தும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.