இராணுவ சிப்பாய் ஒருவரின் மோசமான செயற்பாடு!

Report Print Kamel Kamel in சமூகம்

செயற்கை காலில் மறைத்து வைத்து போதைப் பொருள் கடத்திய ஊனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொரண தஹட்டவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் போதைப் பொருள் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாயை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய குறித்த இராணுவ சிப்பாய் சென்ற மோட்டார் சைக்கிளை சிவில் உடையணிந்த பொலிஸார் நிறுத்தியுள்னர்.

எனினும், நிறுத்தாது குறித்த சிப்பாய் மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார். இதன் போது பொலிஸார் இராணுவ சிப்பாயை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.

இராணுவ சிப்பாயிடம் சோதனை நடத்திய போது எதுவுமிருக்கவில்லை எனவும், அவரது செயற்கை காலை சோதனையிட்ட போது போதைப் பொருட்கள் அடங்கிய 24 பொதிகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இராணுவ சிப்பாய் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றிய போது கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி பாதத்தை இழந்துள்ளார். சந்தேகநபர் நாளை ஹொரணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.