கொழும்புத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையினர் ஆராய்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொழும்புத்துறை பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்றைய தினம் அப்பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கீழ் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடுகின்ற நிலையிலேயே குறித்த பகுதிக்கான விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் கள ஆய்விலும் தமிழ்த் தேசியப் பேரவையினர் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், கொழும்புத்துறை துறைமுக பகுதியைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் மீனவர்களுக்கான இறங்குதுறையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அப்பகுதி மக்களுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.