வழித்தட அனுமதியின்றி பயணிகள் பேருந்து செலுத்தி சென்றவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு?

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பூநகரி, மன்னார் வீதியில் வழித்தட அனுமதியின்றி, பயணிகள் பேருந்தை செலுத்திச் சென்றவருக்கு 20,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ள குறித்த நபரை கைது செய்து அவருக்கு எதிராக பூநகரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers