ஐந்து வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதித்த நீதிமன்றம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் தீர்வை செலுத்தப்படாத சட்டவிரோதமான பீடிகளை விற்பனைக்காக காட்சிப்படுத்திய ஐந்து வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

மது வரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தீர்வைசெலுத்தப்படாத சட்டவிரோத பீடிகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த ஐந்து வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து சட்டவிரோத பீடிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக தனத்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 13 பண்டல் பீடிகளை வைத்திருந்த வர்த்தகருக்கு 10,000 ரூபா தண்டப்பணமும், 12 பண்டல் பீடிகளை வைத்திருந்த வர்த்தகர்களுக்கு 10,000 ரூபா தண்டப்பணமும்,

7 பண்டல் பீடிகளை வைத்திருந்தவருக்கு 7500 ரூபா தண்டப்பணமும், 240 பீடிகளை வைத்திருந்தவருக்கு 3,000 ரூபாவும், 230 பீடிகளை வைத்திருந்த வர்த்தகருக்கு 3,000 ரூபாவும் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு தலா ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா முன்னிலையில் தனித்தனியாக ஆயர்படுத்தியதையடுத்து ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் தலா ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.