வவுனியாவில் பன்றி இறைச்சியுடன் நபர் ஒருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் 10 கிலோகிராம் பன்றி இறைச்சியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விசாரணைகளின் பின் இன்று அவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers