மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18ஆவது ஆண்டு நினைவு தினம்

Report Print Sumi in சமூகம்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் காலை 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குமார் பொன்னம்பலத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முதன்மை வேட்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் பொது ஈகைச் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் கடந்த 2000ஆம் ஆண்டு, சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.