மகிந்தவின் மைத்துனரை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை

Report Print Steephen Steephen in சமூகம்

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைதுசெய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவுக்கான தூதுவராக கடமையாற்றிய போது கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்ய இலங்கை அரசுக்கு சொந்தமான ஒரு லட்சத்து 30 ஆயிரம் டொலர்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் விக்ரமசூரிய, நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்திருந்தது.

இந்த நிலையிலேயே கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஜாலிய விக்ரமசூரிய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.