மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருடன் விசேட சந்திப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோவிற்கும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும், புதிய ஆயர் பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோவுக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்கள் வரையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலினை தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆயரை சந்தித்து மன்னார் மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாகவும், கடந்த காலத்தில் இருந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலைய ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை முன்னெடுத்துச் சென்ற தமிழ்த் தேசியப் பணிகளையும் மற்றும் மன்னார் மக்களின் அடிப்படை பணிகளை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்திருந்தோம்.

மேலும், மன்னார் மக்களினுடைய அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவும், அடக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் புதிய ஆயருக்கு தெரியப்படுத்தினோம்.

எங்கள் கருத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டார். அத்துடன் தான் அவ்வாறே செயற்படுத்துவதாகவும் உறுதி பட தெரிவித்திருந்தார்.

அவர் எமது உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்படுவதாகவும் எங்களுக்கு தெரிவித்ததுடன், குறித்த சந்திப்பு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers