37 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மக்கள் முன்னிலையில் அழிக்கப்படும்

Report Print Steephen Steephen in சமூகம்

கைப்பற்றப்பட்டுள்ள சகல போதைப்பொருட்களையும் மக்கள் முன்னிலையில் அழிக்க தேவையான சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 375,506,864.37 ரூபா பெறுமதியான ஹெரோயின், சட்டவிரோத சிகரட்டுகள், மதுபானங்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விசேட அதிரடிப்படையின் போதைப்பொருள் மற்றும் பாரதூரமான குற்றச் செயல்களை அடக்கும் பிரிவினரால் மாத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றிய ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 136,119,250.00 ரூபாவாகும். 35,330,800.00 பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், 90,199,732.65 ரூபா பெறுமதியான மதுபானங்கள்,113,857,081.72 ரூபா பெறுமதியான கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers