அரசாங்கத்தின் திட்டம் வெற்றியளித்துள்ளது!

Report Print Jeslin Jeslin in சமூகம்

வாசனை திரவிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட அரசாங்கத்தின் சுற்றாடல் பசுமை கிராம வேலைத்திட்டம் வெற்றியளித்திருப்பதாகவும், சிறந்த பலனை தந்திருப்பதாகவும் விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சிறு ஏற்றுமதி பயிர் விற்பனையின் மூலம் 40 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த, வேலைத்திட்டம் மூலமாக ஆயிரம் விவசாயிகள் வரை இணைந்துள்ளதாகவும், இதன்கீழ் விவசாயிகளுக்கு தேவையான உள்ளீடுகளை பெறுவதற்கு தலா 3,000 ரூபா வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.