சகோதரியை காப்பாற்ற தங்கையின் தியாகம்! இலங்கையில் இப்படியொரு பெண்ணா?

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் பட்டதாரி பெண்ணொருவரின் செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

பட்டதாரி பெண்ணுக்கு தொழில் கிடைக்காமையினால் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றார்.

கொத்மலை காஹேன பிரதேசத்தில் 44 வயதான கங்கா நிஷ்ஷங்கா என்ற பெண்ணே இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சுகயீனமடைந்துள்ள தனது சகோதரியை கவனித்து கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு கூலி வேலை செய்து வருகின்றார்.

இது குறித்து கங்கா நிஷ்ஷங்கா கருத்து வெளியிடுகையில்,

“நான் 2013ஆம் ஆண்டு கலை பிரிவில் பட்டம் பெற்றேன். எனினும் இன்று வரை தொழில் ஒன்று பெற்று கொள்ள முடியவில்லை. பல நேர்முக பரீட்சைகளுக்கு சென்றேன். அரசியல் அதிகார சபைகளுக்கும் சென்றேன். எனினும் எந்தத் தொழில் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் வயதாகியது. எனது அம்மாவும் அப்பாவும் உயிரோடு இல்லை. என்னும் எனது அக்கா சுகயீனமடைந்த நிலையில் பல வருடங்களாக காணப்படுகின்றார். அவரின் மருத்துவ செலவுக்கு பெருந்தொகை பணம் தேவைப்படுகின்றது. இதன் காரணமாக தோட்டங்களை சுத்தம் செய்து கிடைக்கும் வருமானத்திலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Latest Offers