பிணை முறி மோசடி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த அறிக்கை தொடர்பான விவாதத்திற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டும் திகதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் சபாநாயகரால் நேற்றைய தினம் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டெதிர்க்கட்சி, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பன பிணை முறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நேற்றைய தினம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.