வைத்திய அதிகாரியின் உருவ பொம்மை எரிப்பு : நாகசேனையில் சம்பவம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகசேனை தோட்டத்தில் தோட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் அவருடைய உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நாகசேனை தோட்ட வைத்தியர் உரிய வைத்திய சேவைகளை வழங்குவதில்லை எனவும், சுகாதார நடவடிக்கைகளில் அதிக அக்கறை கொள்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில், சுமார் 300இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வைத்தியர் தொழிலாளர்களுக்கு எதிராக தேவையற்ற விடயங்களில் தலையிட்டு அவர்களை பொலிஸ் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தோட்ட நிர்வாகம் குறித்த வைத்திய அதிகாரியை தோட்டத்திலிருந்து விலக்குமாறும் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

உரிய காலப்பகுதியில் வைத்தியர் தொடர்பான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும், தொழிலாளர்கள் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.