முல்லைத்தீவில் விரைவாக பரவும் தொற்றுநோய்! 11 போர் பலி

Report Print Nivetha in சமூகம்

முல்லைத்தீவில் சுவாச தொற்றுநோயால் ஒருவர் பலியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மூன்று வாரங்களாக சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அவர் சுவாச நோயினாலும், காச நோயினாலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய மரணத்தையடுத்து, முல்லைத்தீவில் மாத்திரம் சுவாச தொற்றுநோயால் கடந்த மூன்று மாதங்களில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் விரைவாக பரவிவரும் சுவாச தொற்று நோயால் மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.