வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் இருந்து இன்று மாலை யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண் குறித்து விபரங்கள் தெரிந்தால் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.