புத்தர்சிலை வைக்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை! மறுக்கும் இராணுவம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

மன்னார், மடு நுழைவாயில் பகுதியில் புத்தர்சிலை வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என வன்னி இராணுவ கூட்டுப்படை தள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - மன்னார் வீதியில் உள்ள மடு நுழைவாயில் பகுதியில் காணப்படும் அரச மரத்தின் கீழ் இராணுவத்தால் புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால், இராணுவத்தால் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான எண்ணம் கூட எம்மிடம் இல்லை என வன்னி இராணுவ கூட்டுப்படைத்தள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.