சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது!

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த இருவரையும் இன்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, ரிதிதென்ன பிரதேசத்தில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு ஒன்பது எருமை மாடுகளை சட்டவிரோதமான முறையில் ஏற்றி வந்த லொறி ஒன்றையும் பொலிஸார் இன்று சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.