இலங்கை அகதிகள் முகாமில் திடீர் ஆய்வு!

Report Print Murali Murali in சமூகம்

தமிழகம் - குடியாத்தம் காந்தி நகரில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் மத்தியக் குழுவினர் இன்று திடீர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது புது டில்லியில் உள்ள வெளிநாட்டு அகதிகள் நல்வாழ்வுத் துறை இணைச் செயலர்கள் பி.பி.ஷாட்டி, தர்மாரெட்டி, மாநில இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் அகதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

வீடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளிடம் அகதிகள் கோரிக்கை மனு அளித்தனர். ஆட்சியர் எஸ்.ஏ. ராமன், கோட்டாட்சியர் செல்வராசு உள்ளிட்டவர்கள் இதன் போது உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.