தமிழர்கள் ஆயுதத்தை மறந்தோமே தவிர தன்மானத்தையல்ல! இயக்குநர் பாரதிராஜா ஆவேசம்

Report Print Murali Murali in சமூகம்

தமிழர்கள் ஆயுதத்தை மறந்தோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் - ராஜபாளையத்தில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” என்ற கட்டுரை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, “ஆண்டாள் குறித்து அமெரிக்க தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய நூலை மேற்கோள்காட்டி கவிஞர் வைரமுத்து பேசியிருந்தார். வைரமுத்துவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பலரும் கண்டனங்களையும் வெளியிட்டிருந்தனர். இது குறித்து பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கவிஞர் வைரமுத்துவை மிகவும் தரக்குறைவாக பேசியிருந்தார்.

பலர் முகம் சுழிக்கும் அளவுக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினர்களுக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் பாராதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நீ தமிழனாக இருந்திருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டாய். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமேயொழிய தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.