பண்டாரவளையில் மீண்டும் நிலம் தாழிறங்கியுள்ளது!

Report Print Evlina in சமூகம்

பதுளை - பண்டாரவளையில் உள்ள சில பகுதிகளில் மீண்டும் நிலம் தாழிறங்கியுள்ளது

இந்த நிலையில் ஹீல் ஓயா ஆற்றை அண்மித்த பகுதியில் நிலம் தாழ் இறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த பகுதியில் இருந்த சிறிய பாலமொன்று இடிந்து விழுந்ததை தொடர்ந்து நிலம் தாழிறங்கியுள்ளது. உமா ஓயா செயற்றிட்டத்தில் நீரை பெற்றுக் கொள்ளும் இடங்களில் ஹீல் ஓயாவும் ஒன்றாகும்.

தங்களது கிராமத்தினூடாக உமா ஓயா செயற்றிட்டத்திற்கான சுரங்கம் செல்வதாக நிலம் தாழிறங்கியுள்ள பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.