கொழும்பில் இராணுவ அதிகாரியின் மனிதாபிமான செயல்!

Report Print Nivetha in சமூகம்

கொழும்பு - தெமட்டகொடப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வியாபாரி ஒருவரை இராணுவ சிப்பாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கும் பொலிஸாருக்கு அவர் தகவல் வழங்கியுள்ளார்.

தேங்காய் வியாபாரி ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது கார் ஒன்று அவரின் மீது மோதியுள்ளது.

இதனை நேரில் கண்ட இராணுவ சிப்பாய் விபத்தை ஏற்படுத்திய காரின் இலக்கத்தைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இராணுவ பயிற்றுவிப்புப் பணியகத்தில் சேவையாற்றும் 11ஆவது இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த மனதுங்க என்பவரே இந்த மனிதாபிமானச் செயலை செய்துள்ளார்.

இதேவேளை, பொலிஸார் இராணுவ சிப்பாய் வழங்கிய தகவலை தொடர்ந்து சந்தேக நபரை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.