தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பயணித்த வான் விபத்தில் சிக்கியது

Report Print Thirumal Thirumal in சமூகம்

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் யானை சின்னத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பயணித்த வான், லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து ,திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

வானில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை, விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழை காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.