படுகொலை செய்யப்பட்ட வித்தியாவை கடத்தி சென்ற வாகன உரிமையாளருக்கு நேர்ந்த கதி

Report Print Vethu Vethu in சமூகம்
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவை கடத்தி சென்ற வாகன உரிமையாளருக்கு நேர்ந்த கதி

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை கடத்தி சென்ற வேனின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் 18000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எம்.எம்.ரியாஸ் தீர்ப்பளித்துள்ளார்.

கணேசசாமி என்ற நபருக்கு சொந்தமான வாகனத்தை வாடகை அடிப்படையில் வித்தியா கொலையாளிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த நபர் வெளிநாடு சென்றிருந்த காரணத்தினால் அவரை இதுவரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் நாடு திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் வித்தியா கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் நாட்டில் இல்லாமையினால், அந்த கொலைக்கு அவர் உதவியதற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை. எனினும் வாகனம் தொடர்பில் நீதிமன்றத்தில் காணப்பட்ட குற்றச்சாட்டிற்கு அவர் குற்றவாளியாகியமையினால் இந்த தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளர் தனது வாகனத்தை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தமையினால் வித்தியாவின் கொலைக்கு அந்த வாகனம் வாடகை அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வித்தியா கொலையாளிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.