சர்ச்சைக்குரிய திரைப்படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கும் ரணில்!

Report Print Vethu Vethu in சமூகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்தை பார்க்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆர்வம் கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பலத்த சர்ச்சைக்கு மத்தியில் 'பத்மாவதி' திரைப்படம் 'பத்மாவத்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வரவிருக்கிறது.

பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பத்மாவத்'. இதில் தீபிக்கா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் வரலாற்றை சிதைப்பதாக எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், நடிகை தீபிக்கா படுகோனுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அச்சுறுத்தல் மற்றும் சர்ச்சைகளை தாண்டி எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.

அதே நாளில் இலங்கையிலும் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிட வெளியிட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பத்மவாத் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு இலங்கை தணிக்கை வாரியத்திடம், பிரதமர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பத்மவாத் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பம் தெரிவித்துள்ளதாக, திரைப்பட விநியோகஸ்தர் Kalapi Nagada இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.