யாழில் இரண்டு வருடங்களாக தொடர்ந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிவான்!

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி கல்லுண்டாயில் குப்பைகளை கொட்டுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள், மலக்கழிவுகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் போன்றன யாழ். காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் யாழ். மாநகர சபை சீரான முகாமையைப் பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

இதனால், அதனை சூழவுள்ள நவாலி, அராலி, ஆனைக்கோட்டைப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நவாலி மக்கள் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷ் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த, வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கு நீதிவான் வழங்கிய கட்டளையால் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.