கொழும்பில் போக்குவரத்து சமிஞ்சை செயற்படாமையினால் வந்த வினை!

Report Print Sinan in சமூகம்

கொழும்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து கொழும்பு ஆமர் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவத்தும் தடைப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விராணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியானது கொழும்பு நகரின் மிகவும் முக்கியமான போக்குவரத்து வீதியாக காணப்படுகின்றது. இந்நிலையில், அந்த வீதியில் போக்குவரத்து சமிஞ்சைகள் செயற்படாமல் காணப்படுகின்றன.

இதன் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.