வன்னிப் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து பிரிட்டன் மௌனம்!!

Report Print Kamel Kamel in சமூகம்

வன்னிப் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பிலான உண்மையான விபரங்களை வெளியிடாது பிரிட்டன் அரசாங்கம் மௌனம் காத்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

சிங்கள பத்திரிகையில் வெளியான செய்தி பின்வருமாறு:

இறுதிக் கட்டப் போரின் இறுதி வாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய விபரங்களை வெளியிட பிரிட்டன் மறுத்துள்ளது.

இந்த இரகசிய தகவல்களை வெளியிடுவதன் மூலம் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடும் என பிரிட்டனின் தகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வன்னிப் போரின் இறுதி வாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6000 என இரகசிய ஆவணமொன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்த இரகசிய ஆவணத்தை கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரிட்டன் அரசாங்கம் மூடி மறைத்து வந்துள்ளது.

அரச இரகசியங்களை அம்பலப்படுத்த முடியாது என பிரிட்டனின் தகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்குழுவின் ஆலோசகர் ஜெராட் ட்ரெசி தெரிவித்துள்ளார் என சிங்கள பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.