மதுபாவனைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - முத்துநகர் முஸ்லிம் பேண்தகு வித்தியாலயத்தில் மதுபாவனைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஊர்வலம் மதுபோதை ஒழிப்புக் குழுவினரால் இன்று நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை வலயக்கல்வி அலுவலக தம்பலகாமக் கோட்டக் கல்வி பணிப்பாளர் இராஜசுரேஷ் என்பவர் ஊர்வலத்துடன் இணைந்து தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இந்த எதிர்ப்பு ஊர்வலமானது, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.