டெங்கு நுளம்பு அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம்

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு அபாயம் உள்ளதாக அப்பாகுதி பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல், ஆனந்தபுரம், புதுமாத்தளன், வளைஞர்மடம் ஆகிய பிரதேசங்களில் உள்ள கிணறுகள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படுகின்றன.

இதனால் இவ்வாறான கிணறுகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் உள்ளதாக அந்தப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், முல்லைத்தீவில் மாவட்ட சுகாதார பிரிவினரால் குறித்த பிரதேசங்கள் கவனிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சுகாதாரம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிணறுகளை துப்பரவாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.