வேட்பாளர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸார்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் வளாகத்தில் வேட்பாளர்கள் சிலருடன் இணைந்து பொலிஸார் பொங்கல் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் சிவல் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸார் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இந்த கொண்டாட்டத்தில் வவுனியா நகரசபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் த.தே.கூட்டமைப்பு சார்பில் பண்டாரிக்குளம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர், வவுனியா நகரில் போட்டியிடும் வேட்பாளர், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் பண்டாரிக்குளத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆகியோரே கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, த.தே.கூட்டமைப்பின் பண்டாரிக்குளம் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்ட போது பொலிஸ் அதிகாரி ஒருவர் சீருடையுடன் மங்கள விளக்கேற்றி அதனை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி பொலிஸார் குறிப்பிட்ட சில வேட்பாளருக்கு ஆதரவாக நடக்கின்றார்களா என ஏனைய வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.