தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகும் மலையக மக்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில், மலையகத்தில் இன்று வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமையை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மக்கள் பூஜை பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை நடைபாதை வியாபாரிகள் ஊடாகவும், கடை தொகுதிகள் ஊடாகவும் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் செறிந்துள்ள பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை நாட்டின் பல இடங்களிலும் தைத்திருநாளை முன்னிட்டு மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.