தைப்பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்பில் களைகட்டியுள்ள வியாபாரம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பில் இந்துக்கள் அனைவரும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில் இன்று வியாபார தலங்களிலும், வர்த்தக நிலையத்திலும் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புத்தாடைகள் மற்றும் வீட்டு பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்துவரும் மக்கள், பழவகைகள், கரும்பு, மண்பானை, அகப்பை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களையும் கொள்வனவு செய்து வருகின்றார்கள்.

குறித்த மாவட்ட பிரதான நகரங்களில் சனக்கூட்டம் அதிகமாகக் காணப்பட்டு வரும் நிலையில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் குதியில் அதிகளவு சனக்கூட்டத்தையும் அவதானிக்க முடிகின்றாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.