கிளிநொச்சியில் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்

Report Print Yathu in சமூகம்

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் தேர்தல் வாக்கெடுப்பு திருத்தச் சட்டங்கள் தொடர்பில் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் தேர்தல்கள் அமைப்பான கபே அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைந்துள்ள சோலைவனம் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கபே அமைப்பினுடைய நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கான கருத்துக்களை வழங்கியதுடன், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.