மன்னாரில் பொலிஸாரிடம் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்

Report Print N.Jeyakanthan in சமூகம்

மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள துயிலுமில்லத்துக்கு முன் பொலிஸ் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இதற்காக சில மாதங்களுக்கு முன் பெருந்தொகை மணல்கள் பறிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை சில தினங்களுக்கு முன் இரவோடு இரவாக மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மடுப் பொலிசார் தெரிவித்ததாவது,

மணல் திருடு போனது உண்மை எனவும் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் மிகவிரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் எனவும் தெரிவித்தனர்.