வவுனியாவில் களைகட்டியுள்ள தைப் பொங்கல்: பாதுகாப்பு கடமையில் பொலிஸார்

Report Print Theesan in சமூகம்

உலக வாழ் தமிழர்களின் அதி முக்கிய பண்டிகையான தைப்பொங்கலைக் கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், வவுனியாவிலும் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதி பொதுமக்கள் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நகரின் மத்தியில் அதிக சனக்கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதனால் பாதுகாப்புப் பணிகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.