அமெரிக்க தூதுவரை சந்தித்தார் வடக்கு முதல்வர்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்புக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்துவை வட மாகாண முதலமைச்சர் நேற்று சந்தித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க தூதுவரை இன்று சந்தித்துள்ளார்.

எனினும், சந்திப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.