தை பொங்கலை வரவேற்க தயாராகும் கொழும்பு மக்கள்

Report Print Akkash in சமூகம்

உலகளாவிய ரீதியில் இந்து மக்கள் நாளைய தினம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில் கொழும்பு மக்கள் பண்டிகையை வரவேற்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பு வாழ் மக்கள் தை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

கொழும்பில் உள்ள ஆலயங்களிலும், வீடுகளிலும் மக்கள் ஆர்வத்துடன் பண்டிகை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும், நகரில் உள்ள வர்த்தக நிலையங்களிலும், ஆடைக்கடைகளிலும் அதிகமாக மக்கள் காணப்படுவதுடன், வியாபாரிகள் தங்களது மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.