வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துணிகர கொள்ளை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, கல்லடி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி, நொச்சிமுனை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலேயே நேற்று இரவு குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் ஒருவரும் இல்லாத சந்தர்ப்பத்தில், வீட்டின் பின்புற கதவினை உடைத்து பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் மூன்றரை இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் குழுவினர் ஆகியோர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.