பெரும்போக நெல் விளைச்சலை கொள்வனவு செய்ய நடவடிக்கை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

பெரும்போகத்தின் போது கிடைக்கப் பெறும் நெல் விளைச்சலை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பயிர்ச்செய்கை நிலங்களிலிருந்து நெல் விளைச்சல் பெறப்பட்டு வருகிறது. அவற்றினை கட்டுப்பாட்டு விலையில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தும் சபை மேற்கொண்டுள்ளது.

உத்தரவாத விலைக்கும் குறைவான விலையில் நெல் விளைச்சல் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறதாக சபையின் தலைவர் எம்.டீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, தங்களது நெல் விளைச்சல்களை நெற் சந்தைப்படுத்தும் சபையிடம் விற்பனை செய்யும்படி விவசாயிகளை நெல் சந்தைப்படுத்தும் சபை டே்டு கொண்டுள்ளது.