மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள மஹிந்த ராஜபக்ச?

Report Print Kamel Kamel in சமூகம்

நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் மஹிந்த ராஜபக்ச தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் 2021ஆம் ஆண்டு வரையில் நீடிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை களமிறக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

19ஆம் திருத்தச் சட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்தால் மட்டும், மஹிந்தவை மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமொன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தின் பின்னர் சட்டத்தரணிகளின் கருத்தையும் அறிந்து கொண்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.