இரு சடலங்கள் மாறியமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை

Report Print Vethu Vethu in சமூகம்

அனுராதபுரத்திலுள்ள வைத்தியசாலைகளில் சடலங்கள் மாறியமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

அனுராதபுரம் வைத்தியசாலையிலும், தம்மென்னாவ வைத்தியசாலையிலும் உயிரிழந்த இருவரது சடலங்கள் மாற்றமடைந்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

63 வயதுடைய மற்றும் 90 வயதுடைய விவசாயிகள் இருவரின் சடலங்கள் மாறி வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

எனினும் சடலங்கள் மாறுப்பட்டமையை தெரிந்து கொண்டமையை அடுத்து, மீண்டும் சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனை இடம்பெற்றதன் பின்னர் இந்த இரண்டு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சடலங்களில் எம்பம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சடலங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.

வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட சடலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதனை தொடர்ந்து மீண்டும் சடலங்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.