பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள்

Report Print Theesan in சமூகம்

தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவின் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம், வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயம், அருள்மிகு மாடசாமி ஆலயம் உட்பட சகல இந்து ஆலயங்களிலும் இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

அத்துடன், குறித்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளிலும் பொங்கல் பொங்கி மிகவும் விமர்சையாக தைப்பொங்கலை கொண்டாடியுள்ளனர்.

மேலும், தை திருநாள் நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சூரிய பகவானுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.