வவுனியாவில் வேட்பாளர் மீது தாக்குதல் - சந்தேகத்தில் இருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா நெளுக்குளம் தமிழ் தெற்கு பிரதேசசபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நெளுக்குளம் வேட்பாளர் ஒருவர் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு வவுனியா, நெளுக்குளம் பகுதியியில் சிறு விபத்து ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த விபத்தில் சிறுவன் ஒருவன் சிறு காயமடைந்திருந்தார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் நெளுக்குளம் வேட்பாளரான குகராசா மயூரன் என்பவர் மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் இருவரை கைது செய்தனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கியவர்கள் என்ன காரணத்திற்காக தாக்கினார்களென நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.