இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் மரணம் ஒருவர் காயம்

Report Print Steephen Steephen in சமூகம்

இறக்குவனை - கோம்பகந்தை, லபுவெல்வத்தை வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

கஹாவத்தை, லபுவத்தை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தோட்டா ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அதேவேளை, கம்பஹா - பட்டபொத்த பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணி அளவில் காணி ஒன்றில் மண் வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டுகொட பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.